Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் - பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
11:55 AM Apr 24, 2025 IST | Web Editor
Advertisement

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

Advertisement

தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விமேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார். இதனிடையே அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் ஹெலிகாப்டர் உதவியுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியானது.


பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய கேபினட் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் ரத்து செய்தனர். அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது சுற்றுப் பயணங்கள் மற்றும் பிற அரசு அலுவல் தொடர்பான நிகழ்வுகளை ரத்து செய்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.  இந்த அவசர ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “SVES விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை.  கடந்த காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags :
அட்டாரி_வாகா_எல்லை_மூடல்இந்தியா_பாகிஸ்தான்_தொடர்புபயங்கரவாத_தாக்குதல்பஹல்காம்_தாக்குதல்பாகிஸ்தான்_விசா_ரத்துஜம்மு_காஷ்மீர்_தாக்குதல்சுற்றுலா_பயணிகள்_உயிரிழப்புசிந்து_நதி_ஒப்பந்தம்_ரத்து
Advertisement
Next Article