"விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்" - கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி
விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் பலர் கட்சித்தாவலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சிலர் மாற்று கட்சிகளுக்கு செல்வதாக தகவல்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சனிக் கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், அதன் காரணமான அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
விஜயதரணி பா.ஜ.கவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும். செல்வப்பெருந்தகை மாநில தலைவராக நியமித்திருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு இருக்கும்.
தமிழகத்தில் பா.ஜ.க ஒரு முன்னனி கட்சி கிடையாது. பா.ஜ.கவிற்கு என்ன செல்வாக்கு உள்ளது என்பதை இந்த தேர்தலிலேயே தமிழக மக்கள் வெளிச்சம்போட்டு காட்டுவார்கள் தமிழக அரசு வழங்கும் வரியை முறையாக திரும்ப வழங்காததால் பா.ஜ.கவை நிராகரிக்கும் மனநிலையில்தான் தமிழக மக்கள் உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது நம்பிக்கை வர அனைத்து வி.வி.பேட் ரசீதுகளையும் என்ன வேண்டும் ” என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.