Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தயாராகும் காங்கிரஸ் அலுவலகம்!

07:46 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

Advertisement

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின் கணிக்கப்பட்ட பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. இதற்கு முடிவை பொறுத்திருந்து பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகருத்து கணிப்பு அல்ல, மோடியின் ‘கற்பனை கணிப்பு’ என ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது தெரிகிறது. ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உறுதியாகவுள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
CelebrationCongressElection2024IndiaParlimentary Election
Advertisement
Next Article