மதத்தின் பெயரால் பாஜக இந்தியாவை பிரித்து வருகிறது - விஜய் வசந்த் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மதத்தின் பெயரால் பாஜக தான் இந்தியாவைப் பிரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,
“ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி யாத்திரையாக மாறி வருவதால், இதனை எதிர்கொள்ள முடியாமல் திசை திருப்பவே பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் மாறி மாறி கூறி வருகிறார். ஆனால், நிச்சயம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
இதையும் படியுங்கள் : பாஜகவின் நல்லாட்சி பட்டி தொட்டி எங்கும் செல்லவேண்டும் என்பதே பிரதமரின் கனவு - அண்ணாமலை பேச்சு!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிறது. இதில் இருந்து ஒன்று தெரிகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவை எதிர்பார்த்து தான் பாஜக உள்ளன. ஆனால், அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டு ஒரு அணியினர் பாஜகவுடன் கூட்டணி என்கிறார்கள். மற்றொரு அணியினர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிறார்கள். அதிலும் சின்னம் யாருக்கு என இன்னும் கேள்வி குறியாக உள்ளது.