Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு முயற்சி" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

02:30 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு புதிய மசோதா கொண்டுவரத் தயாராகி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :

"மகாத்மா காந்தியின் (யங் இந்தியா 1922), மற்றும் ஜவஹர்லால் நேருவின் (மார்ச் 1940) இந்த இரண்டு மேற்கோள்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில், அவர்கள் பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

ஆனால், நமது குடிமக்களுக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய இரண்டுமே கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அதற்காகப் பல ஆண்டுகளாக போராடியுள்ளனர். சிவில் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நமது தியாதிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான மரபு.

இதையும் படியுங்கள் : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதில்!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவது பற்றி எந்த அரசாங்கமும் நினைக்க முடியாது. இன்று அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. மறுபுறம் பாஜக அரசு டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் என அனைத்தையும் ஒடுக்கத் தயாராகி வருகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்களை நாடு சகித்துக்கொள்ளாது"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Congressgeneral secretaryMediamodiNew BillPMOIndiapriyanka gandhi
Advertisement
Next Article