Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கள் கட்சி பெயர் கொண்ட எக்ஸ் பக்கத்தில் இருந்து விஜய்க்கு வாழ்த்து! - காங்கிரஸ் மறுப்பு

தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு காங்கிரஸ் பெயர் கொண்ட ஒரு எக்ஸ் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்பு இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.
10:21 PM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் (பிப்.02) ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய், கட்சி கொடி ஏற்றி வைத்தார். அதோடு கட்சியின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

தவெக-வின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு Congress for INDIA என்ற எக்ஸ் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், பண அடிப்படையிலான அரசியலை பிரச்சினை அடிப்படையிலான அரசியலாக மாற்றிய பங்களிப்பிற்காக தவெகவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைவதாக விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரித்த எக்ஸ் பக்கத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை  என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எக்ஸ் பதிவில், “பொது மக்களின் தகவலுக்காக இந்த X தள கணக்கிற்கும் இந்த பதிவிற்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Tags :
Congresstamilnadu congressTVK Vijayvijay
Advertisement
Next Article