“#DeputyCM-ஆக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” - தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகை திருவள்ளுவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே வேளையில் தற்போது தமிழ்நாட்டின் அமைச்சரவையில் 4 தலித் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது திமுக ஆட்சி சமூக நீதிக்கான ஆட்சி எனபதற்கான மற்றும் ஒரு சாட்சியாகும்.
1.சி.வி. கணேசன் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை)
2.கோவி.செழியன் (உயர்கல்வித்துறை)
3.மா.மதிவேந்தன் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை)
4.என்.கயல்விழி செல்வராஜ் (மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை)
தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்ப்புலிகள் கட்சியின் வாழ்த்துக்கள். தமிழக வரலாற்றில் முதல்முறையாக அருந்ததியர் ஒருவருக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.