Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசனுக்கு வாழ்த்துகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

பொது மக்களின் மனுகள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
06:38 PM Jul 24, 2025 IST | Web Editor
பொது மக்களின் மனுகள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
Advertisement

 

Advertisement

சென்னை மாநகராட்சி, 160 வது வார்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆலந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 15 துறைகள் சார்பில் 45 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இம்முகாமினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கிவைத்து ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து வீட்டு வரி பெயர் மாற்றம்,மின் இணைப்பு பெயர் மாற்றம்,குடும்ப அட்டை ,மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாணப்பட்ட மனுதாரர்களுக்கு கடை உரிமம், பட்டா பெயர்மாற்றம், சொத்துவரி பெயர்மாற்றம், மின் இணைப்பு பெயர்மாற்றம், குடும்ப அட்டை பெயர் மற்றும் முகவரி மாற்றம், காப்பீடு அட்டை ஆகிய ஆவண சான்றுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வழங்கினார்.

இந்நிகழ்வில் 12 வது மண்டலகுழு தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர் பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன், வட்ட செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில், தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினாலும் இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டம் மூன்றை மாதம் நடைபெறும் தமிழ்நாடு முழுவதும் சிறிய கிராம் முதல் பெரிய நகரம் வரை 10.000 முகாம்கள் அமைத்து திட்டமிட்டு அனைத்து துறைகளின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும் இந்த முகாமில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை கோரி மனுகள் தந்துள்ளார்கள். ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவேண்டிய நிலை இருக்கிறது. அந்த நிலையும் மக்களுக்கு வரகூடாது என்று இந்த முகாமிலேயே ஆதார் திருத்தம் உடனுக்குடன் செய்து தரப்படும் என கூறினார்.

பொது மக்களின் மனுகள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் எதிர்கட்சியினர் எதுவும் கூறலாம், திமுக தலைவரின் உத்தரவுபடி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெருவோம் என்று கூறினார். அதன்படி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசன் அவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
#ChennaiCorporationAadhaarCorrectionAlandurDMKMinisterAnbarasanUngaludanstalin
Advertisement
Next Article