Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கமே”- சீமான்!

பாரிதாபங்கள் கோபி சுதாகரின் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
08:39 AM Aug 08, 2025 IST | Web Editor
பாரிதாபங்கள் கோபி சுதாகரின் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு
பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Advertisement

அப்போது அவர், ”நெசவுத்தொழில் முற்றிலும் நலிவடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த வரி ஏற்றத்தினால் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் ஆடை உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சி அடையும். இதே பாதிப்பு எல்லா மாநிலங்களிலும் இருக்கும். மேலும் நாடு எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை பாருங்கள். தற்சார்பு பொருளாதரத்தை பொருட்படுத்தாமல் முழுக்க முழுக்க ஒரு நாட்டை சார்ந்து இருப்பது பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும்.  ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது டிரம்ப் ஏண் கூறுகிறார்.  என் நாடு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை அவர் ஏன் சொல்கிறார்” எனக் கூறினார்.

மேலும்,டெல்லியில் தமிழக பெண் எம்பியிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து
பேசிய அவர், ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் தான். அது போல் தான் இது திருடனுக்கு தலைநகர் என்ன புறநகர் என்ன எல்லாம் ஒன்றுதான் நாட்டில் பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது ஒரு நாடே நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டிய நிலைஉள்ளது. இதுபோன்ற குற்றங்கள் கடும் தண்டனை கொடுத்து தடுக்கப்பட வேண்டும். குற்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது. நாடே ஒரு குற்ற நாடாக மாறிவிட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்” எ‌ன பேசினார்.

தொடர்ந்து பரிதாபங்கள் வீடியோ சர்ச்சை பற்றி பேசிய அவர், ”எதன் பொருட்டும் ஆணவக் கொலையை ஏற்க முடியாது. உயர்வு தாழ்வை பிறப்பில் பார்க்கக் கூடாது அவருடைய செயல்பாட்டில் தான் பார்க்க வேண்டும். காதலையும் அன்பையும் கொலை செய்ய வேண்டும் என்ற சிந்தனை தான் தாழ்ந்த சிந்தனை ‌அதுதான் தாழ்ந்த ஜாதி. இந்த உலகில் அன்பைத் தவிர எதுவும் மிச்சம் இல்லை. சாதிக்காக கொலை செய்யாதே ஜாதியை கொலை செய்.‌ சாதிக்க நினைத்த இளைஞனை இந்த சமூகம் கொன்றுவிட்டது. பாரிதாபங்கள் கோபி சுதாகர் சரியாக தானே சொல்லி இருக்கிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் தானே. அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ..?என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர்,”தமிழர்களை இழிவுபடுத்தி கிங்டம் படம் வெளியாகி உள்ளது. அதை வெளியிட்டது யார் இனத்தை விட பணம் பெரிதாகி விட்டதா. தமிழர்கள் இலங்கையில் போதைப் பொருள் தான் கடத்தினார்களா?  இன்னும் இரண்டு நாட்களில் அந்த படத்தை எடுக்கவில்லை என்றால் ஒரு தியேட்டரில் கூட எந்த
படமும் ஓடாது” எனப் பேசினார்.

Tags :
KingdomMoviempsudhaparithabangalvideoPMModiSeemanTrump
Advertisement
Next Article