For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!

06:34 PM May 26, 2024 IST | Web Editor
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்   கொளத்தூர் மணி கடிதம்
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அமைந்துள்ளது.  ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி நாளையொட்டி நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்ட பின்னர் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வினோத அங்க பிரதஷ்ன வழிபாடு செய்வது வழக்கம். கடந்த 2024ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இது போன்று நடந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் நெரூர் கிராம அங்க பிரதஷ்ன வழிபாட்டுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில், “சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவர்களுக்கு ஆன்மீக பலனை தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அந்தத் தனிப்பட்ட நபரின் ஆன்மீகத் தேர்வு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக கொளத்தூர் மணி எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது :

"தலித் பாண்டியன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் பக்தர்களை எச்சில் இலையில் உருள்வதை உயர்நீதிமன்றம் தடை செய்தது. பிறர் உணவு உண்டபின் மீதியுள்ள வாழை இலையில் உருளுவது என்பது மனித மாண்புக்கும் நாகரீக சமுதாயத்திற்கும் எதிரானது. இத்தருணத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவத்திற்கு தீர்ப்பு அளித்தது. நீதித்துறை ஆணையின்படி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்ட தீர்ப்புகளை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக, பிறர் உணவு உண்டபின், மீதியுள்ள வாழை இலையில் உருளும் நாகரீகமற்ற வழக்கத்தை மீட்டெடுத்து உள்ளார்.

மதப் பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் உணவு சாப்பிட்டு விட்டு இலைகளில் மனிதர்களை உருட்டுவது அடிப்படை உரிமை என்று உயர்நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன மன்றங்கள் கருதக்கூடாது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் நிலைப்பாடு, அரசியலமைப்பின் கொள்கைகளின் உண்மையான நோக்கத்துக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

இதையும் படியுங்கள் : "வைகோவுக்கு அறுவை சிகிச்சை! அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை!" – துரை வைகோ பதிவு!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, எதிர் தரப்பினர் பதில் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் பொதுவாக வழங்கப்படும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

Tags :
Advertisement