Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கர்நாடகா வாக்கு திருட்டு புகார் - சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.!

கர்நாடகாவில் வாக்குதிருட்டு தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
05:19 PM Sep 21, 2025 IST | Web Editor
கர்நாடகாவில் வாக்குதிருட்டு தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement

கடந்த மாதம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையமானது ஆளும் பாஜக அசுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக  நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் ராகுலின் குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

Advertisement

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக  குற்ற புலனாய்வு துறை விசாரித்து வந்தது. ஆனால்  இந்த விசாரணை தொடர்பான  தரவுகளை அளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசு 2023ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிவான அனைத்து வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டியல் மோசடி குறித்து விசாரித்து வரும்  ஏடிஜிபி கே.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :
KarnatagalatestNewsRahulGandhiVoteTheft
Advertisement
Next Article