Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

11:40 AM Mar 12, 2024 IST | Jeni
Advertisement

கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன் விளைவாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் கையெழுத்தானது.

அந்த வகையில் ஏற்கனவே ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விசிக கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

அதே போல்,  மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதியும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டன.  ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று இரண்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 - மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. போட்டி! 

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில், ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  இதில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட திருப்பூர்,  நாகை தொகுதிகளே மீண்டும் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags :
CommunistPartyofIndiacpiElection2024Elections2024MutharasanNagapattinamTiruppur
Advertisement
Next Article