Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதரஸா இடிப்பால் வன்முறை: உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்...!

11:34 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரகாண்ட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி மதரஸா இடிக்கப்பட்டதை எதிர்த்து ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானியில் காவல் நிலையம் அருகே மதரஸா ஒன்று செயல்பட்டு வந்தது.  இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய குழந்தைகள் மார்க்கக்கல்வி பயின்று வந்தனர்.  இந்த நிலையில்,  அந்த மதரஸா கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி,  அதனை நகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.

இதற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் போலீசார் ஊரடங்கு உத்தரவை விதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.  கலவரக்காரர்களை கண்டதும் சுட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஹல்த்வானி வன்முறையில் பன்புல்புராவில் இதுவரை 2  பேர் உயிரிழந்துள்ளனர்.  100க்கும் மேற்பட்ட காயமடைந்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நகரத்தில் இணைய சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.  மேலும் அப்பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.  பன்புல்புரா பகுதியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போலீஸார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு பிரஹலாத் மீனா கூறியதாவது:

“அரசு நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மதரஸா குறித்தும் முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  கலவரத்தில்,  சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,  பதிலுக்கு போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  மூன்று முதல் நான்கு பேர் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இறந்தவர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.  அவர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா அல்லது அவர்களுக்கு நடுவிலிருந்தவர்களால் இறந்தார்களா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும்.

கலவரக்காரர்கள் பன்புல்புரா காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றனர். அப்போது எங்கள் காவலர்கள் காவல் நிலையத்திலிருந்தனர். ஆனால், காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்திக் காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் வன்முறை பன்புல்புரா அருகே காந்தி நகர் பகுதிக்கும் பரவியது". வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. ஏற்கனவே வீடுகளில் கற்கள் பதுக்கப்பட்டிருந்தன. கலவரக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்”என்றும் கூறினார்.

Advertisement
Next Article