“எளிய மக்களும் பயன்படுத்தலாம்..!” - அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில்கள் இருப்பதாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரண்டு அம்ரித் பாரத் ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் ஒரு ரயில் டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து பீகாரின் தர்பாங்கா வரை அயோத்தி வழியாக இயக்கப்படுகிறது. இரண்டாவது ரயில் பெங்களூரில் இருந்து மால்டா வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை சந்திப்பில் நின்று செல்லும். ஜோலார்பேட்டை சந்திப்பில் நின்று சென்ற இந்த ரயிலை பயணிகள் மலர் தூவி வரவேற்றனர்.
இந்த அம்ரித் பாரத் ரயில், வந்தே பாரத் ரயில்போல அதிவேகமாக செல்லக்கூடியது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. குளிர்சாதனம் அல்லாமல் சாதாரண ரயில் பெட்டிகளும் கொண்டது. மொத்தம் 22 பெட்டிகள் இதில் அடங்கியுள்ளன. ஆரஞ்சு மற்றும் கிரே கலரில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!
சுமார் 1,600 பேர் பயணிக்கும் வகையில் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரயிலில் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலில் சிறப்பான வசதிகள் இருப்பதாகவும் நேரத்தை மிச்சப்படுத்தி செல்வதாகவும், எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.