Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

07:12 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

Advertisement

நடிகர் போண்டா மணி இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.  இவர் 1991-ம் ஆண்டு நடிகர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக அவர் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.  திரைப்படங்கள் தவிர சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்தார்.  சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  இந்த நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:  “தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!

தொடர் சிகிச்சையில் அவருக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது.  ஆனால் உடல் நலம் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார்.  பிறகு வழக்கம்போல் படங்களிலும் நடித்து வந்தார்.  அவர் கடந்த ஒரு வருடமாக, வாரத்திற்கு 2 நாட்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் செய்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (டிச.23) காலை அவர் டயாலிசிஸ் செய்து வீடு திரும்பிய நிலையில் இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சுய நினைவை இழந்தார்.  உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.  65 வயதாகும் நகைச்சுவை நடிகர் போண்டாமணி தமிழ் சினிமாவில் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Tags :
actorBonda ManiChennaideathnews7 tamilNews7 Tamil UpdatesRIP
Advertisement
Next Article