Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

KPY பாலா சார்பில் இலவச ஆட்டோ சேவை தொடக்கம்!

12:19 PM Jan 12, 2024 IST | Web Editor
Advertisement

நகைச்சுவை நடிகர் பாலா,  சென்னை அனகாபுத்தூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்தார். 

Advertisement

காமெடி நடிகர் பாலா,  பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ஆதரவற்ற முதியோர்கள்,  ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.

இவர் அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.  தொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.

இதையும் படியுங்கள்: ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மதுரைக்கு மாற்ற முடிவு!

மேலும்,  ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.

இதுபோன்ற பொதுசேவையில் முழுவதுமாக ஈடுபட்டுள்ள இவர்,  சென்னையில் தான் முதன்முதலாக தங்கியிருந்த அனகாபுத்தூரில் கடந்த மாதம் மழை,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்தும்,  சீட்டுப் போட்டு வைத்திருந்த பணத்தில் இருந்தும் ரூ.3 லட்சத்தை,  அப் பகுதி மக்களுக்கு தலா 1000 வீதம் ரொக்கமாக நேரில் சென்று வழங்கினார்.

இந்தநிலையில்,  அனகாபுத்தூர் பகுதி மக்களுக்காக இலவச ஆட்டோ சேவையை நடிகர் பாலா இன்று தொடங்கி வைத்தார்.  இந்த ஆட்டோ முதியோர்கள்,  மாற்றுதிறனாளிகள் மற்றும் மருத்துவ அவசரத்திற்கு  இலவசமாக இயக்கப்படும்.  இந்த சேவை அனகாபுத்தூர், பம்மல்,  பல்லாவரம் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும்  செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Actor BalaBalaChennaiFree Autonews7 tamilNews7 Tamil Updatestamil nadu
Advertisement
Next Article