For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்! எவ்வளவு தெரியுமா?

02:05 PM Jul 23, 2024 IST | Web Editor
மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும்  செலவும்  எவ்வளவு தெரியுமா
Advertisement

மத்திய பட்ஜெட் 2024-2025 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எந்த வழிகளில் வருவாய் வருகிறது எனவும், அவற்றை எந்தெந்த துறைகளுக்கு அரசு செலவிடுகிறது என்பதையும் இங்கு காணலாம். 

Advertisement

மக்கள் அரசுக்கு செலுத்தும் வரிகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அவற்றின் மூலம் மாநில அரசுகளுக்கு நிதியும், மக்களுக்கான திட்டங்களையும் வழங்குகிறது. அவ்வாறு நாம் செலுத்தும் எந்தெந்த வரிகள் மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் செல்கிறது எனவும், அதனை எந்தெந்த துறைகளுக்கு அரசு செலவிடுகிறது என்பதை இங்கு காண்போம்.

மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவு: 

  • வருமான வரி மூலம் 19 பைசா
  • கலால் வரி மூலம் 5 பைசா
  • ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் மூலம் 18 பைசா
  • பெருநிறுவனங்களுக்கான வரி 17 பைசா
  • சுங்க வரி மூலம் 4 பைசா
  • கடன் அல்லாத மூலதன வருவாய் மூலம் 1 பைசா
  • வரி அல்லாத வருவாய் மூலம் 9 பைசா
  • கடன்கள் 27 பைசா

மத்திய அரசுக்கு 1 ரூபாயில் செலவு

  • ஓய்வூதியம்  4 பைசா
  • மற்ற செலவு 9 பைசா
  • மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு 8 பைசா
  • மற்ற செலவுகள் 9 பைசா
  • மாநிலங்களுக்கு வரி பங்கு 21 பைசா
  • பாதுகாப்பு 8 பைசா
  • மானியங்களுக்கு  6 பைசா
  • மத்திய திட்டங்களுக்கு 16 பைசா
  • வட்டி 19 பைசா
Advertisement