Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ' - அவிநாசியில் பரபரப்பு !

08:56 AM Dec 11, 2024 IST | Web Editor
Advertisement

அவிநாசியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி தோழிகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவரின் மகள் அவந்திகா(19) திருமுருகன் பூண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே போல் அவிநாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் மோனிகா(19) ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் படித்து கொண்டே திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் அவந்திகாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று மாலை அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவந்திகாவின் தம்பி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார் மாணவிகளின் உடல்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவந்திகாவின் தந்தை திட்டி உள்ளார். மேலும் இருவரும் பிரிந்து இருக்குமாறும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தோழிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
AVINASIcaseCOLLEGEfriendsPolicePrivatestudentsSuicide
Advertisement
Next Article