Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூலை வாரி குவிக்கும் ஆடுஜீவிதம் - புதிய அப்டேட்!

03:19 PM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி 8 நாள்கள் ஆன நிலையில்,  இதுவரை இந்திய அளவில் மட்டும் ரூ. 47 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் .  இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  இந்த நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதியுள்ளார்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.  2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  மார்ச் 28-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  இத்திரைப்படம் வெளியாகி நேற்றோடு 8 நாள்கள் ஆன நிலையில், இதுவரை இந்திய அளவில் மட்டும் ரூ. 47 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்றுடன் ரூ. 50 கோடியை தாண்டும் என்றும்,  2-வது வார இறுதியில் உலக அளவில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.  இத்திரைப்படம் இந்தியா முழுவதும் நேற்று மட்டும் ரூ. 3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Aadu jeevithamAmala PaulBlessyPrithvi rajThe Goat Life
Advertisement
Next Article