Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூல் வேட்டையாடும் #thangalaan...! எவ்வளவு தெரியுமா?

09:18 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

விடுமுறை தினமான சுதந்திர தினத்தை குறி வைத்து ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாளே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன்.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படம் இன்று சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 15) தங்கலான் வெளியாகி முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது.

ரசிகர்கள் பலர் தங்கலான் படத்தின் இடைவேளை காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மிகவும் நன்றாக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகர் விக்ரம் என்னும் நடிப்பு அரக்கன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டுள்ளார் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரது நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வசூலும், இந்தியளவில் 12 முதல் 14 கோடி ரூபாய் வசூல் முதல் நாளில் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இன்னும், எந்தளவுக்கு வசூல் வேட்டையை தங்கலான் ஆடுகிறான் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Tags :
Actor vikrambox officeChiyaan VikramPa. Ranjiththangalaanthangalaan Update
Advertisement
Next Article