Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்! 15 நாட்களில் 8 பாலங்கள் இடிந்தன!

07:33 PM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. குறிப்பாக பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இன்று காலை பீகாரின் சிவான் மாவட்டம் கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தியோரியா தொகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைக்கிறது. இது பீகாரில் கடந்த 15 நாள்களில் நிகழ்ந்த 7வது சம்பவம் இதுவாகும்.

காலையில் இடிந்து விழுந்த பாலம்

இந்நிலையில் தற்போது ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. சாப்ரா மாவட்டத்தில் இருந்த பழமையான பாலம் ஒன்று பலத்த மழைநீரால் இடிந்துள்ளது. இதனால் பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாபா தோத்நாத் கோயில் அருகே உள்ள ஆற்றின் மேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த 15 நாட்களில் இடிந்து விழுந்த 8வது பாலமாகும்.

இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
BiharBridge collapsebridgesChapranithish Kumar
Advertisement
Next Article