Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் #RajnathSingh

06:53 AM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

கருணாநிதி உருவ நாணயத்தை ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.

Advertisement

திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளாா்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளாா்.விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

Tags :
CommemorativecoinKarunanidhiRajnath singh
Advertisement
Next Article