Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவை பாலியல் வன்கொடுமை : எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் - சி.பி. ராதாகிருஷ்ணன்..!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
08:59 PM Nov 04, 2025 IST | Web Editor
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இன்று கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவிலுக்கு சாமி தரிசன செய்ய வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

”கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல்துறையின் பொறுப்பு. கண்ணும் கருத்துமாக அதை செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்

சகோதரிக்கும் அவரது பெற்றோர்க்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது நடக்க கூடாதது தான் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags :
cprashkrishnankovailatestNewsTNnewsVicePresident
Advertisement
Next Article