கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட்.13,14 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் .18ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆக.13-இல் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் , ஆகஸ்ட் 14ம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள் : “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
அதேபோல், ஆகஸ்ட் 15ம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 16ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் , சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 13,14ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.