For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா!

05:02 PM Jul 03, 2024 IST | Web Editor
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா
Advertisement

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர் மூலமாக வழங்கியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் திமுக கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது கணவர் திமுகவில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே அதிமுக கவுன்சிலர்கள்.

Tags :
Advertisement