For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
10:48 AM Feb 14, 2025 IST | Web Editor
கோவை குண்டுவெடிப்பு சம்பவம்   மத்திய இணையமைச்சர் எல் முருகன் அஞ்சலி
Advertisement

மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"1998-ஆம் ஆண்டு இதே நாளில், கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இன்னுயிர் நீத்தவர்களுக்கு, எனது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறேன்.

நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான, ‘பாரத ரத்னா’ அத்வானி கலந்து கொள்ளவிருந்த பொதுக் கூட்டத்தை சீர்குலைக்கும் எண்ணத்தோடு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைத்து 11 இடங்களில் நிகழ்த்திய சம்பவத்தில், 46 பேர் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கோவை மாவட்டத்தின் பொருளாதாரச் சூழலை பல்லாண்டுகள் பின்னுக்குத் தள்ளியதோடு மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களின் உயிரைப் பறித்த இச்சம்பவத்தை, ‘கறுப்பு தினமாக’ நாம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறோம்.

அவ்வகையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்து 27-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, உயிரிழந்தோர் குடும்பத்தோருக்கு எனது அஞ்சலியையும், உடல் பாதிப்போடு இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு எனது அனுதாபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement