ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!
10:08 AM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement
ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில், 2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது. மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. கடந்த வாரத்தில் தொடர் மழை காரணமாக உற்பத்தி குறைந்ததால், ஏலத்திற்கு கொப்பரையின் வரத்தும் குறைந்திருந்தது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 29 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 2,392 கிலோ கொப்பரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் ரூ.1,85,686-க்கு, 3 வியாபாரிகள் கலந்து கொண்டு எடுத்தனர்.
இதில், கொப்பரையின் தரத்தை பொருத்து, அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 10 காசுக்கும், குறைந்த விலையாக 62 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 83 ரூபாய் 50 காசுக்கும் விற்பனையானது. வரத்து குறைந்துள்ள நிலையில், கிலோவிற்கு 2 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் வருத்தமடைந்தனர்.
சௌம்யா.மோ
Advertisement