Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இண்டிகோ விமானத்தில் கரப்பான் பூச்சி | வைரலாகும் வீடியோ!

03:41 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement
இண்டிகோ விமானத்தில் சாப்பாட்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் கரப்பான் பூச்சி இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

தனியார் துறை விமான நிறுவனமான இண்டிகோ விமானம் சுகாதாரத் தரங்களைப் புறக்கணித்ததற்காக மீண்டும் புகார் எழுந்துள்ளது.  உணவு வைத்திருக்கும் பகுதியில்' கரப்பான் பூச்சிகள் நடமாடுவது போன்ற வீடியோவை பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  இதையடுத்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த வீடியோ பிப்ரவரி 22 அன்று விமானப் பத்திரிகையாளர் தருண் சுக்லாவால் சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் வெளியிடப்பட்டது.  இண்டிகோ ஏர்லைன்ஸின் உணவுப் பகுதியில் கரப்பான் பூச்சிகள் எப்படி சுற்றித் திரிகின்றன என்பதை இந்த வைரல் வீடியோ காட்டுகிறது.  இதுபோன்ற வீடியோக்கள் வெளிவந்த பிறகு, விமானத்தின் தூய்மைத் தரங்கள் குறித்து மீண்டும் பல பெரிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மறுபுறம், இண்டிகோவும் இந்த விஷயத்தை தீவிரமாக கையிலெடுத்துள்ளது. இண்டிகோ ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டது. அதில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இண்டிகோ விமானம் முழுவதையும் முழுமையாக சுத்தம் செய்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனம் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்கிறது என்றும் IndiGo கூறியுள்ளது.

Tags :
cockroachindigo flightTrending Nowviral video
Advertisement
Next Article