சுறா மீன்களுக்குள் கோகோயின்! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்!
பிரேசில் கடற்கரையில் உள்ள சுறாக்களில் கோகோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள நீரில் இருந்து 13 பிரேசிலிய ஷார்ப்நோஸ் சுறாக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், கடல் உயிரியலாளர்கள் அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் அதிக அளவு கோகோயின் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த போதைப்பொருள் அவற்றின் நடத்தையை மாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சுறா எப்படி போதைப்பொருளை உட்கொண்டது என்பது தெரியவில்லை. சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்த போதைப்பொருள், கோகோயின் தயாரிக்கப்படும் சட்டவிரோத ஆய்வகங்களுடன் தொடர்புடைய கழிவுநீரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் டன் கணக்கில் கோகோயின் கடலில் வீசப்படுவதால், கோகோயின் மூட்டைகளை சாப்பிட்டு சுறா மீன்கள் தங்களுக்கு உணவளிப்பதாக எண்ணி அவற்றை உட்கொண்டிருக்களாம் என்றும் நம்பப்படுகிறது.