For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு - பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

11:03 AM Jan 22, 2024 IST | Web Editor
கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு   பொது சுகாதாரத் துறை இயக்குநர்
Advertisement

கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள்.  அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்,  மாஸ்க்,  தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதனிடையே,  இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது.  குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.  அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் 'மருத்துவத்தின் எதிர்காலம்' என்ற தலைப்பில் சென்னையில் பன்னாட்டு மருத்துவக் கருத்தரங்கம் ஜன.19-ம் தேதி தொடங்கியது.  இந்த கருத்தரங்கம் 3 நாள்களாக நடைபெற்ற நிலையில் நேற்று (ஜன.21) நிறைவடைந்தது.

இதையும் படியுங்கள்: ஐஸ் கட்டிகளை கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’.. தேனி பாஜக சார்பில் வடிவமைப்பு!

இதில் சர்வதேச நாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து 11,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதுடன், பல்துறை மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர்.  இந்த நிலையில் 'கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு - எதை நோக்கி நாம் செல்கிறோம்?' என்ற தலைப்பில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

"கொரோனா காலகட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.  அப்போது பிற நோய்களுக்கான சிகிச்சைகள் தடைபட்டன.  இதனால், இணை நோய்களின் தாக்கம் அதிகரித்தது.  அதேபோன்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்ட பிறகு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு உள்ளாகினர்.

தற்போது ஜெ.என்.1 போன்ற உருமாற்றமடைந்த கொரோனா வகைகள் பரவி வருகின்றன. மிதமான பாதிப்பை உருவாக்கும் இந்த வகை கொரோனா வீரியமானது இல்லை.  ஒருவேளை, அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீநுண்மிகள் இனி வரும் காலங்களில் பரவினால், அதனை தற்போது உள்ள தடுப்பூசிகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாது.  அதற்கென புதிய தடுப்பூசிகளை கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement