Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!

09:59 AM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதியை முற்றிலும் இணையவழியாகப் பெறும் சேவையை சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Advertisement

சிஎம்டிஏ மனைப் பிரிவுக்கான 12 துறைகளின் ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ்களை முற்றிலும் இணையவழியாக வழங்கும் சேவைகள், வீடு மற்றும் மனை வாங்குவோருக்கான விழிப்புணர்வு சித்திர கதைகள் குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், முதுநிலை திட்ட அமைப்பாளர்கள், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

“சிஎம்டிஏ மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் முழுமையாக இணையவழி மூலம் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு திட்ட அனுமதி வழங்கப்படும். ஒற்றைசாளர முறை அடிப்படையில் இணையவழி திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, 2022 மே மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட 1,179 விண்ணப்பங்களில், 820 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல், திட்ட அனுமதி வழங்கும் வரை முற்றிலுமாக இணையவழியாக மேற்கொள்ளப்படும். இது குறித்து சிஎம்டிஏ கட்டட வல்லுநர்கள், கட்டடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம் கட்டட அனுமதி வழங்குவதைச் செயல்படுத்த ஆன்லைன் போர்ட்டலை நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு மனை வாங்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முதல்கட்டமாக இரு கருப்பொருள்கள் கொண்ட சித்திர கதை வெளியிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
approvalCMDADMKNews7Tamilnews7TamilUpdatesonlineProjectsekar babu
Advertisement
Next Article