For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

07:42 AM Feb 20, 2024 IST | Web Editor
12ம் வகுப்பு பொதுத்தேர்வு  இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
Advertisement

12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், அதே போல் 11ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளின் ஹால் டிக்கெட்களை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று (பிப். 20) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், நேற்று (பிப். 19) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement