நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் - மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் 4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 மாணவ, மாணவியர் இத்தேர்வை…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 27, 2025
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தான் மாணவ, மாணவியர் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு ஆகும். எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது பத்தாம் வகுப்புப் பொதுதேர்வுகள் தான். எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டும்; பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.