For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!

04:45 PM Feb 01, 2024 IST | Web Editor
“கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் ”   தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங்
Advertisement

சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை கோட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் கோயம்பேட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தை தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்து வைத்தது.  இங்கிருந்து அனைத்து தென் மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் அனைத்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் கிளாம்பாக்கம் செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக புகார் எழுந்தது.  கிளாம்பாக்கத்துக்கு தொடர்ந்து பேருந்துகள் அரசு இயக்கினாலும் குழந்தைகளுடன் செல்வோரும்,  வயோதிகர்களும் நீண்ட நேரம் பயணித்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டி இருப்பதால் அதிக பொருட்செலவு ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  அதோடு, தென் மாவட்டங்களில் இருந்து பேருந்தில் வரும் மக்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி சென்னை நகருக்குள் வரும் போதும் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என எற்கனவே தமிழ்நாடு அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்திருந்தது.  இந்நிலையில், சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் கோரிக்கையான,  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  6 மாதத்திற்குள் அங்கே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்.  வில்லிவாக்கம் பகுதியில் புதிய ரயில் முனையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.  ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  அவை முடிந்தவுடன் DPR ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆர்.என்.சிங்,  வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் தயாரிப்பு பணிகள் நடந்துகொண்டு வருகிறது.  கூடிய விரைவில் அவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement