For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்..!

10:17 AM Dec 07, 2023 IST | Jeni
சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்
Advertisement

சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பணிகளுக்கும், பணி முடித்தவர்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், பொது விடுமுறை அறிவிக்கப்படிருந்ததாலும், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்ததாலும், மாநகரப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள், மழைநீர் தேங்காத வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கம்..!

இதனையடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் இன்று காலை முதல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement