Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CineUpdate | 'கடைசி உலகப் போர் முதல் தோழர் சேகுவாரா வரை' - செப்.20 ல் வெளியாகும் திரைப்படங்கள்!

01:56 PM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

செப்.20 தேதி வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்து காணலாம்.

Advertisement

தமிழ் நடிகர்களான ஹிப்ஹாப் ஆதி, சசிகுமார், ஹரிஷ் கல்யாண், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பல திரைப்படங்கள் அடுத்த வாரம் செப்.20 தேதி வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

கடைசி உலகப் போர்

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ, டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

நந்தன்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இந்நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த பின்பும் நீண்ட நாள்களாகத் திரைக்கு வராமல் இருந்தது. ரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.

லப்பர் பந்து

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

கோழிப்பண்ணை செல்லத்துரை

சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது.

இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவன தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

சட்டம் என் கையில்

கண்ணை நம்பாதே, துடிக்கும் கரங்கள், வித்தைக்காரன் மற்றும் காஞ்சுரிங் கண்ணப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்த சதீஷ், 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் “சட்டம் என் கையில்”. இத்திரைப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக இப்படத்தில் சதீஷ் களமிறங்கியுள்ளார்.

தோழர் சேகுவாரா

90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, அலெக்ஸ் இயக்கியுள்ள தோழர் சேகுவேரா படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தோனிமா

காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தோனிமா’. பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜான்சன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

தி கன்ஃபஷன்

ஜோ கியாவன்னி இயக்கியுள்ள திரைப்படம் தி கன்ஃபஷன். இப்படத்தை அர்மோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்த 8 திரைப்படங்களும் அடுத்த வாரம் செப்.20ம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement
Next Article