Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ #OTT ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

03:20 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த். இந்நிலையில் ஆனந்த் தற்போது இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். இந்நிலையில், அனந்த் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ADMK-க்கு திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்! காரணம் என்ன?

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Tags :
cinemaupdatesmovieNanban Oruvan Vantha PiraguNews7Tamilnews7TamilUpdatesOTT Release
Advertisement
Next Article