For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Cinemanews | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய படம் | லேட்டஸ்ட் அப்டேட்!

02:06 PM Aug 26, 2024 IST | Web Editor
 cinemanews   வெங்கட் பிரபு  சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய படம்   லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம் வரும் செப் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். படக்குழு மலேசியாவில் இன்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு அடுத்து தான் இயக்க இருக்கும் படத்தை பற்றிய தகவலை கூறினார்.

வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் அவர் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின் இத்திரைப்படத்திற்கான பணிகள் தொடரும் என கூறினார்.

Tags :
Advertisement