கிறிஸ்மஸ் பண்டிகை | தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில், ஏராளமான குவிந்தனர். அவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. ஏசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கொண்டனர். 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவு முதலே கிறிஸ்துவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஏசு கிறிஸ்து பிறப்பை விவரிக்கும் வகையில், வண்ண மலர்களால் ஆன குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் உள்ள பிரசித்திபெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட சிறப்பு பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கனமழையின் பாதிப்பிலிருந்து தென் மாவட்ட மக்கள் மீண்டு வர சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.