For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை: 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 வடிவிலான கேக்!

09:17 AM Dec 25, 2023 IST | Web Editor
கிறிஸ்துமஸ் பண்டிகை  18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 வடிவிலான கேக்
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் உணவகத்தில் 18 அடி உயரத்தில்
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 மாதிரி கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

மயிலாடுதுறையில் பிரபல தனியார் உணவகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் புதுமையான இனிப்பு ரகம் கொண்ட கேக்குகளை செய்து பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது வழக்கம்.  அந்த வகையில் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்திராயான் 3 விண்கலம் மாதிரி கேக் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!

இந்த கேக் சுமார் 18 அடி உயரத்தில் பலவகை மூலப் பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.  இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.   இதைப் பற்றி கடை உரிமையாளர் கூறுகையில் சந்திரயான் 3 விண்கலம் உலக அளவில் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தது.

அந்த வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற கேக்கை தயார் செய்துள்ளோம்.  மேலும் அடுத்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் புதுமையான முறையில் கேக் தயார் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று கூறினார்.

Tags :
Advertisement