பப்ளிக் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை!
சாத்தூரில் உள்ள சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பல பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னதாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக அந்த பள்ளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக வண்ண விளக்குகளுடன் குடில்கள் அமைக்கப்பட்டன. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பள்ளியின் தலைவர் பிரம்மன், பள்ளியின் நிர்வாக இயக்குனர் பரமேஸ்வரி பிரம்மன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் BSI சர்ச்-னுடைய பாஸ்டர்
கேப்ரியல் கலந்து கொண்டார். கிறிஸ்து பிறப்பு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை
குறித்து ஆடல் பாடலுடன் மாணவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள்
வெகு சிறப்பாக நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.