For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

09:55 AM Apr 06, 2024 IST | Web Editor
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Advertisement

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Advertisement

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி,  நிகழாண்டு விழாவானது இன்று காலை 6.30 மணி முதல் 7.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பின்னர் நாளை மாலை படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடைபெறவுள்ளது.  விழா நாட்களில் காலை,  மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்.20 ஆம் தேதி காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் தேரோட்டமும்,  ஏப்.23ஆம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றன.

Tags :
Advertisement