சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை - சபரிமலை நடை இன்று திறப்பு!
சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு, நடை திறக்கப்பட்டு ஒருநாள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து, சன்னதியில் தீபம் ஏற்றுகிறார். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் அடுத்த மாதம் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்குவதையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.