சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு - செங்கல்பட்டில் டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு’ என்ற பெயரில் வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடவுக்கவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், இலட்சினை ஆகியவை வெளியானது.
இந்த நிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூட்டங்களும் மே 11ஆம் தேதி மூடப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.