For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘சின்ன சின்ன கண்கள்’.. விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த GOAT படக்குழு!

02:03 PM Jun 21, 2024 IST | Web Editor
‘சின்ன சின்ன கண்கள்’   விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த goat படக்குழு
Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’  நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி படத்தின் இரண்டாவது பாடல்  ‘சின்ன சின்ன கண்கள்’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  நாளை நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement