சீனப் புத்தாண்டு - அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிரதமர் வாழ்த்து!
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அந் நாட்டு பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனப் புத்தாண்டு நாளை (பிப்.10) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சீன புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படும் வசந்த கால திருவிழாவின்போது சொந்த ஊர்களில் இருப்பதை சீனர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனப் புத்தாண்டிற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த ஆண்டில் மேலும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமணத்திற்கும், மகப்பேற்றுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
உலகளவில், குறிப்பாக சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை அவர் சுட்டி காட்டியுள்ளார். குழந்தைப் பராமரிப்பு, வேலை - வாழ்க்கைச் சமநிலை போன்ற அம்சங்களில் பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவு கொடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். பிள்ளைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் பெற்றோர் அதிக ஈடுபாடு காட்டுவதை அத்தகைய ஆதரவு உறுதிசெய்கிறது.
ஆற்றல், வலிமை, அதிர்ஷ்டம் போன்றவற்றை எதிர் வரும் ஆண்டு குறிக்கிறது. நம்பிக்கையோடும், உறுதியுடனும் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.