சீனாவின் #SpiderWoman… பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மலையில் ஏறி சாதனை படைத்த பெண்!
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 100 மீட்டர் உயரமுள்ள மலையில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் ஏறி சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஸ்பைடர் வுமன் என்று அழைக்கப்படும் 43 வயதான லுவோ டெங்பின், பழமையான மியோ சமுக பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் ஒரே பெண் என கூறப்படுகிறது. இச்சமுதாய மக்கள் எந்தவித உபகரணங்களையும் பயன்படுத்தாமல் உயரமான மலைகளில் ஏறுவர். இது மியாவ் சமூகத்தின் பாரம்பரியம் என மக்கள் நம்புகிறார்கள்.
லுவோ டெங்பின் கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செங்குத்தான மலைகளில் ஏறும் திறன் கொண்டவர். மியாவோ மக்கள் சீனாவின் மலை மற்றும் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் சமூகத்தில் யாராவது இறந்தால், அவர்களை மலையில் அடக்கம் செய்வர்.
இதன் மூலம் தங்களின் முன்னோர்களின் தாயகமாக இருந்த மலையை எளிதாக பார்க்க முடியும் என நம்புகின்றனர். அவர்களின் இந்த பாரம்பரியம் இறந்தவர்களை விவசாய நிலத்தில் புதைப்பதைத் தடுப்பதுடன், அவர்களின் இறந்த உடல்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இந்த மரபுகள் அனைத்தும் மியாவ் சமூகத்திற்கு அதிக உயரத்தில் ஏறும் திறனைக் கற்றுக் கொடுத்துள்ளன.
லுவோ தனது 15 வயதில் இருந்தே மலை ஏற ஆரம்பித்ததாக கூறுகிறார். தன் தந்தை மலையேற பயிற்சி அளித்ததாகவும், ஆரம்பத்தில் மலையேறி மருத்துவ குணமிக்க செடிகளை சேகரிக்கும் பழக்கம் இருந்ததாகவும், படிப்படியாக அது பழக்கமாகி, தற்போது இந்த விஷயத்தில் தனது சொந்த சமூகத்தை சேர்ந்த ஆண்களுடன் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.