இரண்டு மைல் தூரமுள்ள உலகின் மிக உயரமான தொங்கு பாலத்தை திறக்கவுள்ள சீனா!
சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள தொங்கு பாலம் ஹுவாஜியாங் கேன்யன். பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பெய்பன் ஆற்றை கடக்கும் வகையில் உருவாகி வரும் இப்பாலத்தின் கட்டுமானப் பணி,
ரூ. 2200 கோடி செலவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இரண்டு மைல் தூரம் நீண்டுள்ள இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 200க்கும் மேற்பட்ட உயரத்தைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் இரும்பு கட்டமைப்புகள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை என்றும் மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாலம் பயண நேரத்தை 1 மணி நேரத்திலிருந்து வெறும் 1 நிமிடமாகக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனா இப்பாலாத்தை நடப்பாண்டு ஜூன் மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாலம் குறித்து சீன அரசியல்வாதியான ஜாங் ஷெங்லின் கூறியிருப்பதாவது, “பூமியின் விரிசல் வரை பரவியுள்ள இந்த திட்டம் சீனாவின் பொறியியல் திறன்களை வெளிப்படுத்தும். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாறுவதற்கான குய்சோவின் இலக்கை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பாலத்தின் தலைமை பொறியாளர் லி ஜாவோ கூறியிருப்பதாவது, “எனது பணியைப் பார்ப்பதற்கு உறுதியாக மாறியுள்ளது. பாலம் நாளுக்கு நாள் வளர்ந்து இறுதியாக பள்ளத்தாக்கின் மேலே உயர்ந்து நிற்பதைப் பார்ப்பது எனக்கு ஒரு ஆழமான சாதனை உணர்வையும் பெருமையையும் தருகிறது” என்று உணர்ச்சிப் பொங்க பேசி இருக்கிறார்.
ஹுவாஜியாங் கேன்யன் தொங்கு பாலம் திறக்கப்பட்டால், இதுவே உலகின் மிக உயரமான பாலமாக அமையும். ஏற்கெனவே அதே பகுதியில் டியூஜ் பாலம் அமைந்துள்ளது இது தற்போதைய உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது. இந்த பாலம் 883 அடி உயரம் கொண்டது.