For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சீனா பாணியில் பாகிஸ்தான் வளர்ச்சியடையும்” - பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்!

07:51 PM Jul 07, 2024 IST | Web Editor
“சீனா பாணியில் பாகிஸ்தான் வளர்ச்சியடையும்”   பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
Advertisement

சீனா வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், அதே பாணியில் பாகிஸ்தானும் வளர்ச்சியடையும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 6) இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஷெபாஸ் ஷெரீஃப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது,

“பாகிஸ்தானின் கடினமான தருணங்களில் சீனா எப்போதும் துணை நின்று ஆதரவளித்து வருகிறது. உலகளவில் சீனா வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே பாணியில் பாகிஸ்தானும் வளர்ச்சியடையும். சீன தொழில் நிறுவனங்கள் சில, சுமார் 58 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை பாகிஸ்தானில் மேற்கொள்ள உள்ளது.  நிகழாண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள உணவு மற்றும் வேளாண்மை கண்காட்சியில் சீனாவை சேர்ந்த 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும்” என தெரிவித்தார்.

மேலும் சீனாவுக்கு சென்று வேளாண் துறையில் அதிநவீன பயிற்சிகளை மேற்கொள்ள பாகிஸ்தானை சேர்ந்த 1,000 மாணவர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தகவல்தொடர்பு, உள்கட்டமைப்பு மற்றும் மின்சார உற்பத்தி திட்டங்களில் சீனா முன்னெடுத்துள்ள மேம்பாட்டுப் பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ள அவர், 100க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பாகிஸ்தான் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், சீன முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பாகிஸ்தான் அரசு அமைத்து தரும் எனவும்  உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்றபின், ஷேபாஸ் ஷரீஃப் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த மாதம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement