நிலவை ஆய்வு செய்யும் சீனாவின் முயற்சி தோல்வி!
11:01 AM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement
சீனா கடந்த 13 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பிய 2 செயற்கைக்கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.
Advertisement
நிலவில் ஆய்வு செய்வதற்காக டிஆர்ஓ-ஏ மற்றும் டிஆர்ஓ-பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் சிசுவான் மாகாணம், ஷிசாங் ஏவுதளத்திலிருந்து யுயன்ஷெங்-1 எஸ் ராக்கெட் மூலம் கடந்த 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டன. இந்த நிலையில், ராக்கெட்டின் 3-ஆம் நிலை செயல்பாட்டில் தவறு ஏற்பட்டதால் அவற்றை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று ஷிசாங் ஏவுதள மையம் நேற்று (மார்ச்.15) அறிவித்தது.
அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பிற செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை விண்ணிலேயே அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.